கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும். அவற்றை பேசித் தீர்க்க முடியுமென சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறான கருத்துகள், நிலைப்பாடுகள் இருக்கக்கூடும்.இவை இணைந்து கூட்டணி அமைக்கும்போதும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படலாம்.
எனவே, பிரச்சினைகள் இருப்பின் அவை பேசித் தீர்த்து கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம். தற்போதைய சூழ்நிலையில் உலக பொருளாதாரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சட்ட திட்டம், கொள்கைத் திட்டம் மற்றும் வேலைத் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..