19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் - அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது, கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். 


தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை மூடிமறைப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரை ஜனாதிபதி விடுதலை செய்தார் என்று எதிரணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அரசு அடியோடு நிராகரிக்கின்றது.


புதிய அரசு பதவியேற்ற நாள் தொடக்கம் துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட மக்கள், ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிரணியினர் கூட ஜனாதிபதியிடம் எழுத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.





அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் - அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு