ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தாம் தொடர்ந்தும் அங்கம் வகித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான சர்ச்சை காரணமாக ரவி கருணாநாயக்க அண்மைக் காலமாக எவ்வித அரசியல் கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ரவி கருணாநாயக்க அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனினும், தாம் செய்ற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஓரம் கட்டுவதில் சிலர் காட்டிய முனைப்பு தமது எதிர்த்தரப்பினரை விரட்டுவதற்கு காட்டவில்லை அதுவே தற்போதைய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
.jpg)












0 Comments
No Comments Here ..