25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைய காரணம் என்ன?

இலங்கையில் நேற்று குறைந்தளவான கொரோனா தொற்றுக்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 869 என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


எனினும் இதனால் சந்தோசமடையவோ, நிம்மதியடையவோ முடியாது என்றும் குறிப்பிட்டார்.


நேற்று 869 என்ற குறைந்தளவான கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள போதிலும், தற்போது சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை.

பரிசோதனைகள் மற்றும் முடிவுகள் என்பன குறைவடைந்துள்ளன. இதன் காரணமாகவே குறைந்தளவான நோய்த் தொற்றுக்கள் பதிவானதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.


மேலும் நேற்று 32 கொரோனா இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைய காரணம் என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு