18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் சீனாவுக்கு விற்பனையா?


வடக்கின் நிலங்களை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கவுள்ளது என்ற சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.


நெடுந்தீவில் உள்ள 40 ஏக்கர் நிலத்தையும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க பழைய கட்டடம் ஒன்றையும் சீனாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.


மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த நோக்கத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார் எனவும் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சிறீதரன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என அதிகாரிகள் தெரிவித்ததாக பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.காசிலிங்கம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


நெடுந்தீவில் எந்த நிலத்தையும் சீனாவிற்கு வழங்கும் திட்டம் இல்லை, யாழ். கச்சேரியின் பழைய கட்டடத்தை சீனாவிற்கு வழங்கும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் சீனாவுக்கு விற்பனையா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு