யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதிமிக்க காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தேசிய நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக தம்முடன் இணைந்துகொள்ளும்படி எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பை விடுத்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பினை விடுத்தார்.
இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகளுக்கு எமது நாட்டிற்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு சந்தர்ப்பமும் உருவாகும். மேற்குலக நாடுகளும், சக்திகளும் ஸ்ரீலங்காவிலுள்ள எரிபொருள் வளங்களை கொள்ளையிடக் கங்கணம் கட்டித்திரிகின்றன.













0 Comments
No Comments Here ..