விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரும், ஆலோசகர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தேனேஷியவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உலர்ந்த பாக்குகளுக்கு போலி தனிமைப்படுத்தல் சான்றிதழ்களை வழங்கிய குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சி.ஐ.டி.யினர் பல அறிக்கைகளை பதிவுசெயதுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் வேறு யாராவது தொடர்பு கொண்டுள்ளனரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 Comments
No Comments Here ..