உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சுமார் 1,000 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சில நாடுகள் ஃபைசர் தடுப்பூசிகளை பெறாதவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கின்றது.
இதனால் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏராளமான மாணவர்களிடமிருந்து, தமக்கு ஃபைசர் தடுப்பூசியை போடுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதன்படி, சுமார் 987 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று இராணுவத் தளபதி கூறினார்.
சுமார் 2,100 மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு சினோபார்ம் தடுப்பூசி போடுவார்கள் என்றும் அவர் கூறினார்
0 Comments
No Comments Here ..