21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சுகாதார துறையினர் போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை - இராணுவ தளபதி தகவல்

கொவிட் தடுப்பூசி விநியோகம் தொடர்பிலான தகவல்களை சேகரிப்பதற்கு சுகாதாரத்துறையினர் போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.


தென்னிலங்கை தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


சுமார் மூன்று லட்சம் கொவிட் தடுப்பூசிகள் தொடர்பிலான தகவல்கள் இன்னும் கணனிமயப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தடுப்பூசி ஏற்றப்பட்ட சுமார் மூன்று லட்சம் பேரின் விபரங்கள் திரட்டிக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொவிட் தடுப்பூசியின் முதலாம் மாத்திரையை வழங்கிய சுகாதார தரப்பினரால் தகவல்கள் திரட்டப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இராணுவத்தினர் தடுப்பூசி விநியோகம் செய்யும் முதல் நாளிலிருந்தே தரவுகளை கிரமமான முறையில் திரட்டிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும் சுகாதார தரப்பினர் தகவல்களை புத்தகங்களில் எழுதி வைத்துக் கொள்ளும் நடைமுறையொன்றை பின்பற்றினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான தகவல்களை திரட்டும் பொறுப்பு விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், சுகாதாரத் தரப்பினர் தகவல்களை உரிய முறையில் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அஸ்ட்ராசெனெகா இரண்டாம் மாத்திரை தடுப்பூசி வழங்கப்படும் போது விடுபட்ட தரவுகளை திரட்டிக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.





சுகாதார துறையினர் போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை - இராணுவ தளபதி தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு