21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

திருப்பியனுப்பப்பட்ட வவுனியா-கொழும்பு அரச பேருந்து!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக குறித்த பேருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அரச பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் சிலர் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர். இதனால் குறித்த பேருந்து ஈரப்பெரியகுளத்தில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.






திருப்பியனுப்பப்பட்ட வவுனியா-கொழும்பு அரச பேருந்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு