04,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையின் கச்சா எண்ணெய் கேள்வி கோரலை ஏலம் எடுக்க முன்வராத விநியோகஸ்தர்கள் - ஏற்படுமா எரிபொருள் தட்டுப்பாடு?

700,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேள்வி கோரிய போதிலும் எந்த கச்சா எண்ணெய் விநியோகதஸ்ரும் ஏலம் எடுக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய்க்கான கேள்வி கோரலுக்கான ஏலங்கள் நேற்று (20) மூடப்பட்டன.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு விநியோக நிறுவனங்களும் இந்த கேள்வி கோரலில் ஈடுபடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக 4-5 நிறுவனங்கள் இத்தகைய கேள்வி கோரலுக்கு ஏலம் எடுக்க முன்வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தற்போது கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இது ஜூலை 31 க்குள் 1 பில்லியன் டொலர் கடன் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை அரசாங்கம் பூர்த்தி செய்யவுள்ளதால் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஒக்டேன் 92 பெற்றோலுக்கான மற்றொரு கேள்வி கோரலும் இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








இலங்கையின் கச்சா எண்ணெய் கேள்வி கோரலை ஏலம் எடுக்க முன்வராத விநியோகஸ்தர்கள் - ஏற்படுமா எரிபொருள் தட்டுப்பாடு?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு