06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழ்.மாவட்டத்திற்கு புதிய இராணுவ தளபதி நியமனம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமனம் பெற்றுள்ள - மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நேற்று முன்தினம் (19) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டார்.

தளபதி தலைமையக வளாகத்திற்கு வருகை தந்ததையடுத்து சிரேஸ்ட அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனையடுத்து 11 இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடமைகளை சிறப்பாகச் செய்வதற்காக வேண்டி பௌத்த பிக்குகளிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட தளபதி, பிக்குகளின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டார்.

அதனைடுத்து உரை நிகழ்த்திய அவர் யாழ் குடாநாட்டில் படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் தொடர்பில் எடுத்துரைத்ததோடு தனது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51, 52 மற்றும் 55 ஆகிய படைப்பிரிவுகளின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு