03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஸ்ரீலங்காவிற்கு எதிராக களமிறங்கிய நாடுகள்? ஜெனிவாவில் அடுத்த வியூகம்?

ஸ்ரீலங்காவிற்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமெனக் கோரி ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48ம் அமர்வுகளின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உள்ளிட்ட ஐந்து நாடுகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டு சீனா முன்வைத்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா ஆதரவளித்த காரணத்தினால், பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, மெசிடோனியா, கனடா, ஜெர்மனி மற்றும் மொன்டினிக்ரோ ஆகிய நாடுகள் இவ்வாறு ஸ்ரீலங்காவிற்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமென ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.





ஸ்ரீலங்காவிற்கு எதிராக களமிறங்கிய நாடுகள்? ஜெனிவாவில் அடுத்த வியூகம்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு