13,Feb 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

சீனாவின் சினோவெக் தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்கிறதா?

அரசாங்கம் சினோவெக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய உள்ளதாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என்று ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சினோவெக் தடுப்பூசிகளை எவ்வளவு கொடுத்து வாங்குவது எவ்வளவு மாத்திரைகள் தேவை என்பது போன்ற எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் அரசாங்கம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர தேவைகளுக்கு சினோவெக் தடுப்பூசி பயன்படுத்த முடியும் என அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் அதனை கொள்வனவு செய்ய வேண்டுமென அர்த்தப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய வலயத்தில் சீனா கொண்டுள்ள கரிசனையை காயப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில வெளிநாட்டு சக்திகள் சினோவெக் தடுப்பூசி குறித்து இலங்கையில் போலிச் செய்திகளை பரப்பி வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்





சீனாவின் சினோவெக் தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்கிறதா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு