ராகமை வைத்தியசாலை செயல் இழக்கும் நிலையை எட்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் லியனகே ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வைத்தியசாலையில் 500 கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் மெத்தைகளுடன் வைத்தியசாலை தாழ்வாரங்களில் காணப்படுகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றாமல் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் வைத்திருக்கின்றனர் என சில நோயாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ராகம மருத்துவமனையின் கழிவறைகள் வசதிகள் மோசமானவையாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது மருத்துவமனையே ஒரேயொரு போதனா வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்கள் நான்கு விடுதிகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எங்கள் மருத்துவமனையின் 26 முதல் 30ம் விடுதிகளை நாங்கள் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளோம். நாங்கள் இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்கள் அனைவரையும் துரித அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்இதன் பின்னர் சிறிதளவு அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..