கொரோனா தொடர்பான தரவுகளை திரித்து மக்களுடன் ஒரு கொடிய விளையாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (13) ஜேவிபி தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் ,அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுபோன்ற தொற்றுநோய்களில் தேவைப்படுவது துல்லியமான தரவைக் கொண்டிருப்பது என்று அவர் கூறினார். எனினும், தரவை மறைக்கவும் வைரஸ் தொற்றை தவிர்க்கவும் ஜனாதிபதி வேலை செய்கிறார் .
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் கொவிட் ஒழிப்பு குழுவில் உறுப்பினர்களாக உள்ள சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குறிப்புகள் இருந்தும் ஜனாதிபதி மக்களுடன் ஒரு கொடிய விளையாட்டில் ஈடுபடுகிறார் எனத் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..