இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு தரிப்பிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கலவானா மற்றும் கெஸ்பேவாவில் உள்ள இரண்டு டிப்போக்களே மூடப்பட்டுள்ளன.
கலவானா டிப்போவின் 12 ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்று (13) முதல் மூடப்பட்டுள்ளதாக கலவானா சுகாதார அதிகாரி (எம்ஓஎச்) தெரிவித்துள்ளார்.
கலவானா டிப்போவின் மேற்பார்வையாளர் உட்பட டிப்போ ஊழியர்களின் குழுவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கெஸ்பேவா டிப்போவின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட 48 பேர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று முதல் கெஸ்பேவா டிப்போவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
டிப்போவின் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு டிப்போக்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால், பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது
0 Comments
No Comments Here ..