23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பில் டெல்டா? பொது மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை, இருந்தும் தொற்று முறையினையும் மரண எண்ணிகையினையும் பார்க்கும்போது டெல்டா மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் கொரனா நிலைமைகள் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152 கொரனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாவது அலையில் 143 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 20 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் மரணமடையவில்லை.

20 - 50 வயதுக்குட்பட்டவர்கள் 15 பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேரும் உயிரிழந்துள்ளனர். அதில் மரணமடைந்தவர்களில் 54 வீதமானவர்கள் ஆண்,

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் சிறுசிறு கொத்தனிகள் உருவாகுவதற்கு ஒன்றுகூடல்களே காரணமாகயிருந்தன.

மரண வீடுகள்,கோவில்களுக்கு சென்றுவந்தவர்கள், திருமண வீடுகளுக்கு சென்றுவந்தவர்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிருங்கள், ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும்.

தேவையிருந்தால் மட்டுமே வீட்டினை விட்டு வெளியில் செல்லுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில்வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூகபொறுப்புடன் செயற்படவேண்டும்.. தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளைக்கொண்டுள்ளவர்கள் வீட்டினைவிட்டு வெளியில் வரவேண்டாம்.

அவ்வாறு யாரும் வெளியில் வந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.





மட்டக்களப்பில் டெல்டா? பொது மக்களுக்கு எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு