எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இது தொடர்பில் ஜனாதிபதி முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்குதல் சம்பந்தமாக மேலும் சில திட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் மரணங்களை தவிர்ப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்
16.jpg)












0 Comments
No Comments Here ..