11,May 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஊரடங்கை மீறுகின்றவர்களுக்கு என்ன நடக்கும்?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று இரவு தொடக்கம் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் தொழில் நடவடிக்கைகளுக்காக செல்பவர்கள் விசேட அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளுதல் அத்தியாவசியமானதில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஊரடங்கை மீறுகின்றவர்களுக்கு என்ன நடக்கும்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு