14,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஒக்டோபர் மாதத்தில் 3 ஆவது டோஸ் தடுப்பூசி குறித்து ஆராய்வு

ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதம் இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது.

தற்சமயம் ஒரு கோடி 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் ஏற்றப்பட்டிருக்கின்றது.

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.





ஒக்டோபர் மாதத்தில் 3 ஆவது டோஸ் தடுப்பூசி குறித்து ஆராய்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு