நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக அதிகரித்து வீசும் காற்று என்பனவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..