ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் பற்றி ஏதேனும் உண்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் சிஐடி பிரிவிற்கு வந்து தெரிவிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வெளிப்படையான கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து சிறப்பு அறிக்கையை வெளியிடும் போதே பொலிஸ்மா அதிபர் இந்த கோரிக்கையை வெளியிட்டார்.
இதுவரை 46 சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல் மற்றும் அது தொடர்பான தொடர் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இது சிறந்த சந்தர்ப்பம்.
உங்களில் யாரேனும் ஒருவருக்கு உண்மைகள் தெரிந்திருந்தால், உடனடியாக இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடிக்கு முன் வந்து, அந்த உண்மைகளை சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபராக நான் பகிரங்க அழைப்பை விடுக்கிறேன் என்றார்.
0 Comments
No Comments Here ..