18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை பௌத்த பிக்குகள் படைத்த சாதனை!

இலங்கை பௌத்த பிக்குகள் சாதனை ஒன்றை படைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாட்டில் கொவிட் தொற்று வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அத் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக பௌத்த பிக்குகள் இணைந்து இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, குருநாகல் – மாவத்தகம மீதென்வல பிரதேசத்திலுள்ள போதிமலு விகாரை பிக்குகுள் இணைந்து, அருகிலுள்ள ஏனையகிராமங்களையும் இணைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரித் பிரார்த்தனை நூலினை ஏற்பாடு செய்துள்ளனர்.

அவர்களின் இந்த முயற்சியின் பயனாக உலக சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த விகாரையின் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உலகில் மிக நீண்ட பிரித் பிரார்த்தனை நூல் பயன்படுத்தப்படுவது உலக சாதனையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் இன்றுவரை இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 





இலங்கை பௌத்த பிக்குகள் படைத்த சாதனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு