15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா நோயாளியுடன் சென்ற 'சுவசெரிய' நோயாளர் காவு வண்டி விபத்து!

கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற 'சுவசெரிய' நோயாளர் காவு வண்டியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணை தெரணியகலையில் இருந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதே இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்று இடமளிக்காமை காரணமாக குறித்த நோயாளர் காவு வண்டிக் பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 





கொரோனா நோயாளியுடன் சென்ற 'சுவசெரிய' நோயாளர் காவு வண்டி விபத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு