அரசாங்கம் சில பணக்கார குபேரர்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும் சலுகை அளிப்பதன் மூலம் முதலாளித்துவத்திற்கு வழி வகுக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி திருத்தச் சட்டம் மூலம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கறுப்பு பணத்தை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் மூலம் மோசடி செய்பவர்கள் தங்கள் கருப்பு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்
யாராவது வரி செலுத்தாமல் பதுக்கி வைத்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு, அவற்றுக்கு போதுமான ஏற்பாடுகள் உள்ளன என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பதிலாக, 1%, மோசடி செய்பவர்கள் மற்றும் சில பணக்கார குபேரர்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகைகளை வழங்க முயற்சிக்கிறது.
நாட்டில் முதலாளித்துவத்தை அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் சமூக நீதியை மீற முயற்சிப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த சட்டமூலம் ஊடாக சொத்துக் குவித்து மற்றும் வரிகளை மறைத்து வைத்திருக்கும் மோசடி செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன என்றும் அவர் மேலும் அநடத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..