உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட 'ஃபைசர்' தடுப்பூசியை இலங்கையில் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று ஒப்புதல் அளித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறினார்.
12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'ஃபைசர்' தடுப்பூசி வழங்குவதன் மூலம், கோவிட் சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தடுக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், கொரோனா ஒழிப்புக்குழுவின் ஒப்புதலுடன், கூடிய விரைவில் தடுப்பூசியை போடத் தொடங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பிரிவுகளிலும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருப்பதால் பாடசாலை மாணவர்களுக்கு 'ஃபைசர்' தடுப்பூசி முறையாக போடப்பட வேண்டும்.
இதேவேளை, 12 - 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக அடுத்த மாதம் 4 மில்லியன் டோஸ் 'ஃபைசர்' ஒதுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் செனல் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..