18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு பேரை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இரண்டு பேரிடமும், சந்தேக நபர் 12 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது


தெனிபிட்டிய எழுவாவல பிரதேசத்தை சேர்ந்த நபரிடம் 6 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அவரது சகோதரரையும் கனடாவிற்கு அனுப்புவதற்கு 6 லட்சம் ரூபாய் பணம் மேலதிகமாக வங்கியில் வைப்பு செய்யுமாறு சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய குறித்த நபர் மீண்டும் பணம் வைப்பு செய்துள்ளார். எனினும் வாக்குறுதியளித்ததனை போன்று சந்தேக நபர் தொழில் பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பில் வெலிகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அந்த முறைப்பாட்டிற்கமைய வெலிகம காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.




வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு