திருகோணமலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.













0 Comments
No Comments Here ..