22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொவிட் தொற்றை விடவும் தடுப்பூசிகளால் ஆபத்து - சுதர்ஷினி பெர்ணான்டோ தகவல்

கொவிட் தொற்று ஏற்படுவதனை விடவும் தடுப்பூசி அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகளில் ஒரு கருத்து உள்ளதென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே (Sutharshini Fernando Pillai) தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இன்னமும் தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அனைத்து சுகாதார பரிந்துரைகளையும் ஆராய்ந்து பார்த்து சிறுவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

விஞ்ஞான ரீதியாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகளுக்கள் தீர்மானங்கள் மேற்கொள்ளவில்லை.

கொவிட் தொற்று ஏற்படுவதனை விடவும் தடுப்பூசியால் அதிக ஆபத்து தடுப்பூசியால் ஏற்படும் என மேற்கத்திய நாடுகளில் கருத்து உள்ளது..

இதனால் வெளிநாடுகளும் இன்னமும் சரியான ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கொவிட் தொற்றை விடவும் தடுப்பூசிகளால் ஆபத்து - சுதர்ஷினி பெர்ணான்டோ தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு