08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

அணு ஆயுத தயாரிப்புக்கு கட்டுப்பாடு இல்லை: ஈரான்

டெஹ்ரான், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ''அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்வோம்; இதற்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை,'' என, ஈரான் அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடான ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை, ஏவுகணை தாக்குதல் நடத்தி, அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கொன்றது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது, ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், ஈரான் அதிபர் ரவுகானி கூறுகையில், ''அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளிலும், ஆராய்ச்சியிலும் அதிக அளவில் ஈடுபட உள்ளோம். அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு, எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை,'' என்றார்.

அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக, 2015ல், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், விதிமுறைகளை மீறி, ஈரான் செயல்படுவதாக கூறி, 2018ல், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது, அணு ஆயுத தயாரிப்பில், ஈரான் தீவிரம் காட்டத்துவங்கியுள்ளது.





அணு ஆயுத தயாரிப்புக்கு கட்டுப்பாடு இல்லை: ஈரான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு