நுவரெலியா - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.
தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆர்.ராமையா 55 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 50, இவர்களின் மகள் டிவனியா வயது 35, குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..