இன்று, விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்த நாட்டையும் பேரழிவு தரும் நிலைக்கு தள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa).
இது குறித்து நிகழ்வொன்றில் மேலும் பேசிய அவர்,
நமது நாடு எதிர்நோக்கியுள்ள இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற பாரம்பரிய தனிமனித அரசியல் மட்டும் வழி அல்ல என்றும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாட்டை, சமூகரீதியாக வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்க வழி, நாட்டுக்கான சேவையே என்றும் அவர் கூறினார்
. தூரநோக்கற்ற அரசாங்கம் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியபோது, "எதிர்க்கட்சியின் மூச்சு" திட்டத்தின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி உயிர்களைக் காப்பாற்றியது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..