11,Feb 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பிரதேசவாசிகள் தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவர் பலி

கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா மாளிகாகொடல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற மூன்று கொள்ளையர்களில் ஒருவர், பிரதேசவாசிகள் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி பொருட்களை கொள்ளையிட்டு கொண்டிருந்த போது, வீட்டார் சத்தமிடுவதை கேட்ட அயல் வீடுகளில் உள்ளவர்கள் அங்கு சென்று கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

பிரதேசவாசிகளின் தாக்குதல் படுகாயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.





பிரதேசவாசிகள் தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு