லெபனானைப் போன்று இலங்கையும் தற்போது நெருக்கடியான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் விரைவில் நாடு இருளில் மூழ்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(Chambika Ranawaka) எச்சரித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் மழையினால் மின் விநியோகத்தை சீர் செய்ய முடியும் எனவும், ஆனால் மூன்று வாரங்கள் மழை பெய்யாவிட்டால் மின்துண்டிப்பை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் மின் உற்பத்தியை இயக்க முடியாத நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..