தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (1) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்(T.Vinothan) தெரிவித்தார்.
தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்கலாக 50 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்கலாக 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..