நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்கலைக்கழகம் அல்லது சட்டக் கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella)இன்று (டிசம்பர் 1) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசாவிட்டாலும் பல்கலைக்கழகத்திலோ அல்லது சட்டக் கல்லூரியிலோ செல்வாக்கு உள்ளதால் அதற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கிரியெல்ல தெரிவித்தார்.
"1970 களில், பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரி பரீட்சைக்கு உட்படுத்தப்படாமலேயே சட்டக் கல்லூரியில் நுழைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது." நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்கவினால் இந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்(Mahinda Rajapaksa) இதன்மூலம் சட்டக் கல்லூரிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..