எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடிப்பு சம்பவம் தொடர்பில் Litro மற்றும் Laughfs Gas நிறுவனத்தின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என எரிவாயு தொடர்பான வெடிப்புகளை ஆராயும் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகே(Prof. Shantha Walpalage) தெரிவித்தார்.
இந்த வாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றார். தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் குழுவானது Litro நிறுவனத்தில் ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த தலைவர், Laughfs நிறுவனத்தில் இதுவரையில் தள விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.












0 Comments
No Comments Here ..