நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாளை மறுதினம் பழுதடைந்த ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் இணைக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் பழுது காரணமாக சில பகுதிகளில் இரவில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படலாம் என அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்படும். எனினும் நாளை மறுதினம் வரை மாத்திரமே மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..