பாணின் விலை அதிகரித்துள்ள நிலையில் சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பாண் சரியான எடையில் இல்லாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், பாண் மாவின் விலை அதிகரிப்புடன் பாண் ஒன்றின் விலை 80 ரூபாவாக அதிகரித்த போதிலும், அது 450 கிராமில் இல்லை.
சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பாணின் எடை 350 முதல் 400 கிராம் வரை இருக்கும். அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு இலகுவான பாணை உற்பத்தி செய்யும் இவ்வாறான பேக்கரிகளின் உரிமையாளர்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..