அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வை சிறுபான்மை கட்சிகள் கோரினாலும் அவ்வாறான அதிகாரப்பகிர்வு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளப்படும் என “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Ven. Galagoda Atte Gnanasara) அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வை சிறுபான்மை கட்சிகள் கோரினாலும் அவ்வாறான அதிகாரப்பகிர்வு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளப்படும் என “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Ven. Galagoda Atte Gnanasara) அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி அரசியலுக்கு வந்த சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் இனங்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக இனங்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் எனவே 13 கோரிக்கை அல்லது 13 பிளஸ் கோரிக்கையை தற்சமயம் முன்வைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, “ஒரு நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி மாதாந்த அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து வருவதாகவும் அவர குறிப்பிட்டார்.
"தற்போது, 'ஒரு நாடு ஒரே சட்டம்' செயலணியில் உள்ள நாங்கள் அனைத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் உள்ளடக்கியுள்ளோம், நாங்கள் வடக்கின் சில பகுதிகளுக்குச் செல்லும் போது, மத்திய அரசினதோ அல்லது எங்கள் அரசியலமைப்புச் சட்டமோ அமுல்படுத்தப்படவில்லை, அவர்கள் எமக்கு எல்லா உதாரணங்களையும் வழங்கினர். உதாரணத்திற்கு காத்தான்குடியில் ஒரு சபை உள்ளது, அவர்கள் காத்தான்குடியை அந்த சபையால் ஆளுகிறார்கள், அரசாங்க சட்டம் அங்கு இல்லை, அவ்வாறான செயற்பாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
0 Comments
No Comments Here ..