எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச கிளையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..