நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற போது அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான ஆதார பூர்வமான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்து போனஸ் ஆசனம் ஊடாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட றோஜன் ஸ்டாலின் மேசையை தூக்கி தாக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகளே வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..