மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்து, இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர், செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெறும் நபர்கள் 500 ரூபாய் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.
0 Comments
No Comments Here ..