16,Mar 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

அனைத்து கன ரக வாகனங்களுக்கும் புதிய அறிவித்தல்

பேருந்து மற்றும் அனைத்து கன ரக வாகனங்களும் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு வாகனப் போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளதாக நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு காவல்துறைப் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.  

இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக் காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நகரத்தை அலங்கரிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு காவல்துறைப் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார மேலும் கூறியுள்ளார்

இதேவேளை, பேருந்துகளில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடல்கள் இடம்பெறாவிட்டால், அது தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது




அனைத்து கன ரக வாகனங்களுக்கும் புதிய அறிவித்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு