12,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகத்தடை

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை எட்டு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி, திருகோணமலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபை தெரிவித்துள்ளது.

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான நீர் குழாயில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே, இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகத்தடை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு