14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

1500 ஆக இருந்த உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாய்!

இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக நாட்டில் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக உரச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தென் இலங்கை ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட முன்னதாக 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூடை உரம் 1500 முதல் 2000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

எனினும் தற்பொழுது ஒரு மூடை உரம் சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரத்தை விவசாயிகளினால் கொள்வனவு செய்யக்கூடிய நியாயமான விலைக்கு விற்பனை செய்வது குறித்து இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.





1500 ஆக இருந்த உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாய்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு