அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் ஈட்டுவோர் அத்தியாவசிய உணவு பொருட்கள் பெற்றுக் கொள்வதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் கோரியுள்ளார்.
வறிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கம் உறுதிமொழி ஒன்றை வழங்க வேண்டும்.
இது தொடர்பிலான கோரிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் தாம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏனைய மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறந்த முகாமைத்துவத்துடன் கூடிய நிர்வாகமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..