யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் இரண்டு பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலைக்கு நேற்று முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாய் உயிரிழந்தார்.
மகள் மற்றும் மகளின் கணவர் ஆகியோரே மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிக கடன் சுமைக்காரணமாகவே அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..