மூத்த ஒலிப்பரப்பாளரும், கல்வியாளரும், முன்னாள் அதிபருமான ஏ. ஆர். எம் ஜிஃப்ரி நேற்று காலமானார்.
61 வயதான அவர், மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்ற அவர், குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்று, விஞ்ஞான பாட ஆசிரியரானார்.
இதனையடுத்து களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றியுள்ளதுடன் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த அதிபர்களில் ஒருவராக இவரும் இடம்பெற்றார்.
அன்னாரின் ஜனாஸா தற்சமயம் பாணந்துறையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி கிரியைக்காக கல்முனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
0 Comments
No Comments Here ..